கமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி படத்திற்கு சென்ற தயாரிப்பாளர் !

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பாதியில் நின்றது. அதன் பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காக நிலையில் படம் என்ன ஆனது என்ற கேள்வி வந்தது.

தற்போது எங்களுக்கு கிடைத்த தகவல்படி லைகா நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாம். ஷங்கர் இப்படத்திற்கு அதிக பட்ஜெட் கேட்டதால் இதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இதனால் இப்படத்திற்கு தயாரிப்பாளர் இல்லாமல் இருக்கிறது. ஷங்கர் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தயாரிக்கும்படிகேட்டு வருகிறாராம்.

இந்தியன் 2 படத்திலிருந்து லைகா விலகிய நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment