ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் – சர்ச்சை பேச்சிற்கு ராதாரவி விளக்கம்!

நடிகர் ராதாரவி சமீபத்தில் நயன்தாராவைப் பற்றி அவர் கூறிய விமர்சனம் மிகப்பெரிய சர்ச்சையில் முடிந்தது. அவர் பேசியதற்கு எதிராக பல எதிர்ப்புகள் வந்த பிறகு  ராதாரவி வருத்தம் தெரிவித்தார்.

நயன்தாராவும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.  இதில் ராதாரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ‘எனக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் நான் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன்’ என்று ராதாரவி கூறினார்.

அதுக்குறித்து சமீபத்தில் கேட்ட போது ‘அட நான் அப்படி குறிப்பிட்டது அவருக்கு தான் பெருமை, அதாவது அவர் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் என்பதை குறிப்பிட்டேன்’ என அவர் கொடுத்த விளக்கம் அனைவருக்குமே ஷாக் தான்.

Suggestions For You

Loading...