ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் நாயகி இவர் தான் – அப்போ அதிரடி தான்!

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற தகவல் மட்டும் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்படவுள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக ஆரம்பத்திலிருந்தே பேசப்பட்டு வந்த நிலையில் அது நிஜம் தான் என்பது போல் செய்திகள் வெளி வந்துள்ளன.

Suggestions For You

Loading...

Leave a Comment