தர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழைய கூட்டணி!

darbar

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடங்களில் நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

மும்பையில் நடந்துவந்த முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. அதை தொடர்ந்து சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுவுள்ளது.

இந்நிலையில் தர்பார் இன்ட்ரோ பாடல் பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடவுள்ளாராம். கடைசியக வந்த பேட்ட படத்தில் எஸ் பி பி சில வரிகள் மட்டும் பாடியிருந்தார்.

அது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தமுறை முழு பாடலையும் எஸ் பி பி தான் பாடவுள்ளாராம். வழக்கமாக ரஜினி படங்களில் இன்ட்ரோ பாடலை எஸ் பி பி தான் பாடுவார், கபாலி, காலா படங்களில் தான் இந்த கூட்டணி அமையாமல் போனது

Suggestions For You

Loading...