ரஜினியின் “தர்பார்” படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர்!

darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயரிட்டுள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கி படப்பிடிப்பும் அப்படியே தொடங்கியுள்ளது. மும்பையில் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது போஸ்டரும் ரெடி ஆகிவருகிறதாம். அது குறித்து இப்பட டிசைனர் வின்சி ராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், ஃபஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி, இது முழுக்க முழுக்க என் கற்பனையில் தயாரானது. ரஜினி போலீஸ் என்பதால் அந்த விஷயங்களை போஸ்டரில் வைத்தேன், மற்றபடி குறியீடு எல்லாம் இல்லை.

இதைவிட இரண்டாவது போஸ்டர் டிசைன் இன்னும் செம மாஸாக இருக்கும், அந்த வேலை தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...