கோடி ரூபாய் கொடுத்ததும் விளம்பரத்தில் நடிக்காததற்கு இவர் தான் காரணம் – சாய் பல்லவி ஓபன் டாக்!

sai pallavi

ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தின் மூலம் தமிழிலும் மிக பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றார். இவர் நடிப்பில் அடுத்ததாக “என் ஜி கே” படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார்.

Actress-Sai-Pallavi-with-her-Sister-Puja-Kannan

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர் கலர் கம்மி என்பதை உணர்ந்தாள்.

நானும் நிறைய வெஜிடேபுள் சாப்பிடு என்றேன், அதையும் அவள் செய்தால், அப்போது தான் தெரிந்தது கலர் என்பது ஒரு சிறு பிள்ளை மனதை எப்படி மாற்றுகிறது என, அதனாலேயே அதை ஊக்கப்படுத்துவது இல்லை’ என கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...