ரீவைண்ட்: விஜய் படத்திலிருந்து பாதியில் எஸ்கேப்பான நடிகை!

vijay

விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். ஆனால் இந்த இடத்திற்கு வர கடின உழைப்பின் மூலமாகவும் நிறைய அவமானங்களை சந்தித்தும் வந்தார் எனபது நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.

விஜய்யை வைத்து ‘நினைத்தேன் வந்தாய்’ என்கிற படம் இயக்கியவர் செல்வபாரதி. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரம்பா நடித்தார். ஆனால் படத்தின் சில காட்சிகள் ஷூட்டிங் மீதம் இருக்கும் நிலையில் ரம்பா “நான் சிரஞ்சீவி படம் நடிக்க போகிறேன்” என கிளம்பிவிட்டாராம்.

அதனால் இயக்குனர் டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘வண்ண நிலவே’ பாடலில் வருவது ரம்பா இல்லையாம், டூப் வைத்து தான் எடுத்தாராம். ரம்பா முகத்தை காட்டாமல் பாடல் முழுவதும் வருவது இதனால்தானாம்.

ஹிட் ஆன அந்த பாடல் இப்போதும் அதிகம் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...