ஷங்கர் – இளையராஜா கூட்டணி – யாருக்கும் தெரியாத தகவல்!

இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர். இவரது இயக்கத்தில் கடைசியக வெளியான 2.0 படம் அதிகம் பேசப்பட்டது.

இந்நிலையில் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருகிறார். படம் கைவிடப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் ஒருவழியாக பிரச்சனையெல்லாம் முடிந்து தேர்தலுக்கு பிறகு இந்தியன் 2 தொடங்கவுள்ளது.

தற்போது ஷங்கரை பற்றி ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷங்கர் – இளையராஜா கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் ஏற்கனவே ஒரு முறை இணைத்துள்ளார்கள்.

இளையராஜா 75 நிகழ்ச்சியில் தான் இந்த தகவல் பலருக்கும் தெரிய வந்துள்ளது. கமல் ஹாசன் வரி கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிக்க, இதை ஷங்கர் தான் இயக்கினாராம், அந்த விளம்பரத்திற்கு இசை இளையராஜாவாம்.

Suggestions For You

Loading...