வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம்!

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் தோல்வியை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வுசெய்து வருகிறார்.

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 23ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

கன்னடத்தில் உருவான ‘மப்டி’ படத்தின் ரீமேக் படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

Suggestions For You

Loading...