விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி இதோ!

விஜய் சேதுபதி  கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இவர் நடிப்பில் அடுத்ததாக  சூப்பர் டீலக்ஸ் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தில் இவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் நாளை வெளியாக இருப்பதால்  கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து சேதுபதி பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில்  விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படம் வரும் ஏப்ரல்11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கோடை  விடுமுறையை கொண்டாடும் வகையில் இப்படம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Suggestions For You

Loading...

Leave a Comment