சூப்பர் டீலக்ஸ் முதல் நாள் மாஸ் வசூல் – எல்லா இடமும் ஹவுஸ்புல் தான்!

தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ்.

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான படங்களுக்கு மாறுபட்ட படமாக அமைத்திருந்த சூப்பர் டீக்லஸ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. படம் பார்த்தவர்கள் அனைவரும் இப்படத்தை புகழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் தமிழகத்தில் முதல் நாள் செம்ம வசூல் செய்துள்ளது, பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

இதில் குறிப்பாக சென்னையில் சூப்பர் டீலக்ஸ் ரூ 45 லட்சம் வரை முதல் நாள் வசூல் செய்ய, தமிழகத்தில் எப்படியும் ரூ 3 கோடியை தாண்டிய வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Suggestions For You

Loading...