சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பாஹத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கதை:

இப்படத்தில் மொத்தம் நான்கு கதைகள், ஒவ்வொன்றிற்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் அனைவரின் கதையும் ஒரு இடத்தில் ஒத்துப்போகிறது எனபது தான் இயக்குனரின் திறமை.

இந்த உலகம், எது நல்லது, எது கேட்டது என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக சூப்பர் டீலக்ஸ் அமைந்துளளது.

விமர்சனம்:

ஆரமபத்தில் சமந்தா தன் கணவனுக்கு தெரியாமல் தன் பழைய காதலுடன் உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், அதை தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றார்.

5 சிறுவர்கள் ஆபாச படம் பார்கும்போத்து அந்த படத்தில் ஒரு சிறுவனுடைய அம்மா ரம்யா கிருஷ்ணன் வர அதை பார்த்து கோபமாக டிவியை உடைத்துவிட்டு அம்மாவை கொல்வதற்கு புறப்பட்டு, அவனுக்கே ஆபாத்தாக முடிகிறது.

விஜய் சேதுபதி தனது மனைவி மகனை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வர, திருநாமகையாக மாறிவரும் ஷில்பாவை இந்த சமுக ஒதுக்கி கிண்டல் செய்கிறது.

ரம்யா கிருஷ்ணன் கணவராக வரும் மிஸ்கின் கதாபாத்திரமும் முக்கியதுவம் வாய்ந்தது. கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்ற கேள்விக்கு மிஸ்கின் மூல அழுத்தமான கருத்தை கூறியுள்ளார் இயக்குனர் தியாகராஜ குமாரராஜா.

இந்த உலகத்தில்நடக்கும் ஒவ்வொரு நல்லதுக்கு ஒவ்வொரு கேட்டதுக்கு தொடர்பு இருக்கிறது என்று இத்தனை கதாபாத்திரங்கள் மூலம் இயக்குனர் கூறியுள்ளார்.

இப்படத்தில் நடித்த அனைவரும் தனது 100% நடிப்பை காட்டியுள்ளார்கள், மோசமான போலீஸ் அதிகாரியாக வரும் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கட்சிதமாக செய்துள்ளார்.

இப்படத்தில் ப்ளஸ் என்று சொன்னால் அனைவரையும் சொல்லவேண்டும், இவர்கள் என்று குறிப்பிட்டு சொன்னால் மற்றவர்கள் உழைப்பு தெரியாமல் போய்விடும். இப்படத்தில் வேலைபார்த்த சின்ன சின்ன நடிகர்கள் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் 100% உழைப்பை கொடுத்துள்ளார்கள்.

ரெடிங்: 4.5/5

Suggestions For You

Loading...