சிவா இயக்கும் சூர்யா படத்தின் நாயகி இவர் தானா?

suriya-siva

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிவா சூர்யாவை வைத்து படம்இயக்கவுள்ளார். இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

சூர்யாவின் 39வது படமான இதில் நயன்தாராவை நாயகியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சிவா தான் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளாராம். சிவா இயக்கிய விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தற்போது மும்பையில் நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கஜினி படத்திற்கு பிறகு அவர் 14 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

Suggestions For You

Loading...

Leave a Comment