மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்பான் ரகசியம் வெளியானது!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பான். முழுக்க முழுக்கு வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது.

இந்நிலையில் மோகன்லால் நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் லைவ் மூலம் சூர்யா கலந்துகொண்டார். அப்போது காப்பான் படத்தின் கதை பற்றி கேட்கப்பட்டது.

உஷாராக பதிலளித்த சூர்யா ஏற்கனனே கசிந்த தகவல்கள் மட்டும் கூறினார். அதாவது இப்படத்தில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் நான் அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளேன் என்றார்.

எந்த தகவலையும் கசிய விடமால் பார்த்துக்கொண்டது காப்பான் படக்குழு. ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகும் என மோகன்லால் உளறிவிட்டார், ஆனால் அதே சூர்யா ஆகஸ்ட் விடுமுறை நாளில் இப்படம் வெளியாகும் என உஷாராக பதிலளித்தார்.

Suggestions For You

Loading...

Leave a Comment