அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு – ரசிகர்கள் குதூகலம்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் “என்.ஜி.கே.” ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மேலம் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பில் இருந்த இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மே மாதம் 31-ம் தேதி உலகம் முழுவதும் ‘என்.ஜி.கே.’ வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார்.

சற்று நேரம் முன்பு தான் அஜித் நடித்துவரும் “நேர்கொண்ட பார்வை” படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. அதை தொடர்ந்து சூர்யாவின் பட அறிவிப்பும் வந்ததால் இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டத்தில்இருக்கிறாரகள்..

Suggestions For You

Loading...

Leave a Comment