மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படத்தின் அறிவிப்பு வெளியானது!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “என்.ஜி.கே.” சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.

நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பில் இருந்த இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மே மாதம் 31ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சிங்கள் பாடல் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தற்போது தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...