சூர்யா – சுதா படத்திற்கு தூய தமிழில் தலைப்பு – போஸ்டர் வெளியானது!

suriya sudha kongara

சூர்யா நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் “என் ஜி கே”. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கிவரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக சயிஷா நடித்துள்ளார். பொமன் இரானி, மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு, “இறுதிச்சுற்று” படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது அவருடைய 38-வது படமாகும். ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

Soorarai Pottru
Soorarai Pottru

இப்படத்திற்கு “சூரரைப் போற்று” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியானது அதில் சூரிய வேஷ்டி சட்டையுடன் நிற்பதுபோல அமைந்துள்ளது.

இப்படம் பிரபல தொழிலதிபரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான உருவாகவுள்ளது.

2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

Suggestions For You

Loading...