கத்துக்கறேன் தலைவரே..! – என் ஜி கே விமர்சனங்களுக்கு முதல் முறையாக சூர்யா அதிரடி பதில்!

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் என் ஜி கே . செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் படம் எதிர்ப்பார்த்தது போல் இல்லை என பலரும் குற்றம்சாட்டினர், ஆனால், படத்தில் நிறைய குறியீடுகள் இருப்பதாக சிலர் கூறினர்.

இதை தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த குறியீடு காட்சிகளை டுவிட்டரில் விளக்கமாக கூறினர்.

ஒரு சிலர் இதையெல்லாம் படித்த பிறகு படம் நன்றாக இருப்பது போல் தெரிகின்றது என கூற, இதுக்குறித்து சூர்யா இன்று தன் ரசிகர்களுக்கு உருக்கமாக ஒரு டுவிட் செய்துள்ளார், இதற்கு சூர்யா ரசிகர்களிடம் நல்ல ஆதரவு உள்ளது.

மேலும் கத்துக்கறேன் தலைவரே என்ற என் ஜி கே படத்தில் இடம்பெறும் வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment