வைகைப்புயல் வடிவேலுவின் தற்போதைய நிலைமை இது தான்!

காமெடியில் கொடிகட்டி பறந்த வைகைப்புயல் வடிவேலு இன்றும் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு தெய்வமாகத் திகழ்கிறார். சில காரணங்களால்  நடிப்பதை நிறுத்தி இருந்த வடிவேலு 2015ஆம் ஆண்டில் ரீ-என்ட்ரி கொடுத்தார். வடிவேலு கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான எலி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்துக்குப் பிறகு விஷாலின் கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கிய வடிவேலு அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால்  படப்பிடிப்பு பாதியில் நின்றது. தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.  ஆனால் இப்படமும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் அறிகுறிகள் தெரியவில்லை. இந்நிலையில் வடிவேலு தற்போது மதுரையில் இருக்கிறார் இன்னும் பதினைந்து நாள் கழித்து சென்னை திரும்பும் இவர் பத்திரிகையாளர்களை சந்திக்க…

Read More