துருவ் விக்ரமின் அடுத்த பட இயக்குனர் இவரா? இது தேவையா?

விக்ரம் மகன் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனதே பெரும் சர்ச்சைகள் ஆகிவிட்டது. அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் நடித்த இவர் பாலா இயக்கத்தில் முழுப்படத்தில் நடித்தும் அது ரிலிஸாகவில்லை. அப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, மீண்டும் அர்ஜுன் ரெட்டியை தற்போது ரீமேக் செய்து வருகின்றனர், இப்படம் ஜுலை மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் துருவ் அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கப்போவதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த எந்த ஒரு படமும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் ஷாக் தான் ஆகியுள்ளனர், ஏன் விக்ரம் இந்த இப்படி ஒரு முடிவை எடுத்தார் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். Suggestions For You நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா எச்சரிக்கை !… அடுத்த கட்டத்திற்கு சென்ற “ஆதித்ய…

Read More

நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா எச்சரிக்கை !

vikram-director-bala

நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் அறிமுகமாகும் படம் ஆதித்திய வர்மா. அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இதை முதலில் பாலா வர்மா என்ற பெயரில் இயக்கியிருந்தார். அந்த படம் விக்ரம் மற்றும் தயாரிப்பாளருக்கு பிடிக்காததால் வர்மா படத்தை குப்பையில் போட்டுவிட்டு வேறுஒரு இயக்குனரை வைத்து ஆதித்திய வர்மா என்ற பெயரில் மீண்டும் படமாகிவருகிறார். இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாலா இயக்கிய படம் சரியில்லை என கூறி மொத்த படத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு தற்போது மீண்டும் வேறு பெயரில் படமாக்கி வருகின்றனர். அந்த படத்தில் நான் இயக்கிய காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று தான் பாலா எச்சரித்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம். Suggestions For You அடுத்த…

Read More

அடுத்த கட்டத்திற்கு சென்ற “ஆதித்ய வர்மா” – அடுத்த ரிலீஸ் இது தான்!

Dhruv-Vikram

தெலுங்கு படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து முடித்து டீசர், டிரைலர் ஆகியவற்றை வெளியிட்டார்கள். பாலா இயக்கிய இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்தார் ஆனால், படத்தைப் பார்த்த தயாரிப்பாளரும், விக்ரமும், பாலா இயக்கிய படத்தைப் பார்த்து தெலுங்கு ஒரிஜனல் படம் போல இல்லாமல் இருந்ததால் அந்தப் படத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். இருதரப்பும் சுமூகமாக அந்தப் பிரச்சினையை முடித்துக் கொண்டது. பின்னர் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீஸ்யா என்பவரை வைத்து ‘வர்மா’ பெயரை ‘ஆதித்ய வர்மா’ என மாற்றி வேறு புது ஹீரோயினை வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளார்கள். அஜித் 60வது படத்தின் இசையமைப்பாளர் இவரா? உறுதிசெய்த புகைப்படம்? இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நேற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. விரைவில் டீசர் வெளியீடு நடைபெற உள்ளது.…

Read More

துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் இயக்குனர் கெளதம் மேனன்!

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் லிஸ்டில் இருப்பவர் கெளதம் மேனன். கிளாஸ் இயக்குனர் என்று பெயர் வாங்கிய இவருக்கு கொஞ்ச காலமாக நேரம் சரி இல்லை என்று தான் சொல்லவேண்டும். இவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்ட, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாகாத நிலையில் இவர் தயாரித்த நரகாசூரன் படம் கூட வெளியாகாமல் பிரச்சையில் இருக்கிறது. இந்நிலையில், துருவ் விக்ரம் நடித்துவரும் ஆதித்ய வர்மா படத்தில் துருவின் தந்தையாக நடிக்க இயக்குனர் கெளதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு பணிகளில் விரைவில் கெளதம் மேனன் இணைய உள்ளார். படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். துருவ் விக்ரமின் நண்பர் வேடத்தில் அன்புதாசன் நடிக்கிறார். Suggestions For You அடுத்த கட்டத்திற்கு சென்ற “ஆதித்ய வர்மா&#822……

Read More

ஆதித்ய வர்மா படத்தின் இணைந்து மேலும் ஒரு ஹீரோயின்!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. விக்ரம் மகன் துருவ் அறிமுகமான இப்படத்தை பாலா இயக்கினார். படம் வெளியாகும் தருணத்தில் வர்மா படம் நின்றது அனைவருக்கும் அதிர்ச்சி தான். தயாரிப்பாளருக்கு படம் பிடிக்காததால் பாலா எடுத்த முழு படத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் புதிதாக எடுக்கவுள்ளனர். ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ்வை மட்டும் வைத்துவிட்டு அனைவரையும் நீக்கி புதிய நடிகர் நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் தயாரிப்பாளர். தற்போது இப்படத்திற்கு ஆதித்ய வர்மா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை கிரிஷயா என்பவர் எடுக்கவுள்ளார், இவர் தான் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன் கமிட் ஆக, இசையமைப்பாளர் ரதன் தான். மேலும் படத்தின் ஹீரோயினாக ஹிந்தி…

Read More

வர்மா படம் மூலம் 7 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில்க்கு வரும் பிரபலம்!

“அர்ஜுன் ரெட்டி” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார். படம் முடிந்து வெளியாகும் தருணத்தில் “வர்மா” கைவிடப்பட்டது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது. புதிய வர்மா படத்தில் துருவ் ஜோடியாக இளம் பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. “அர்ஜுன் ரெட்டி” தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் “வர்மா” படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 7ஆம் அறிவு படத்திற்கு பிறகு சுமார் 7 வருடங்களுக்கு பிறகு, ரவி…

Read More

மீண்டும் முதலிருந்து படமாகும் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் – வர்மா ரிலீஸ் ஆகாது!

தெலுங்கில் மெகா ஹிட் படமான அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வர்மா என்ற பெயரில் இப்படம் உருவானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் மிகவும் வரவேற்பில் இருந்தது. ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் வெளியான நிலையில் வரும் 14ஆம் தேதி ரிலீஸாக தயாராக இருந்தது. அனால் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் அவுட்புட் பார்த்த தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லையாம், அதனால், படத்தை மீண்டும் முதலிருந்து எடுக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. மேலும் பாலாவை நீக்கிவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து இப்படத்தை தயாரிக்கவுள்ளார்களாம். துருவ் தவிர மற்ற நடிகர் நடிகைகளையும் மாற்றவுள்ளார்களாம். இந்த தகவல் திரையுலகத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலா ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. Suggestions For You…

Read More