தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல்!

தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருக்கிறது. தற்போது இப்படத்தை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அதேப்போல விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள படம் சிந்துபாத், இதனை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி உள்ளார். இந்த இரு படங்களையும் ஒரே நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படங்களை வாங்கிய நிறுவனம் தான் பாகுபலி 2ம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டது. அந்த வகையில் பாகுபலி தயாரிப்பாளருக்கும், இந்த நிறுவனத்திற்கும் இடையில் பணப்பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக பாகுபலி தயாரிப்பாளர், ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி 63 படத்தில் ரேபா மோனிகாவின் லுக் இதுதான்- லீக்கான புகைப்படம், ஆனால் ஒரு ஷாக்கிங் தங்களுக்கு…

Read More

குப்பைக்கு போன என்னை நோக்கி பாயும் தோட்டா – இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம் !

enai noki paayum thota

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “என்னை நோக்கி பாயும் தோட்டா” நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் டீசர், பாடல்கள், வீடியோ பாடல்கள் என படத்தை தவிர அனைத்தும் கடந்த வருடமே வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர், வீடியோ பாடல்கள் என அணைத்து Youtubeல் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் வெளியாகாது என்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வர்மா படம் போல குப்பைக்கு போய்விட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. Suggestions For You…

Read More

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி – இந்த முறையாவது தோட்டா பாயமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க முக்கிய வேடத்தில் சசி குமார் நடித்துள்ளார். படம் தொடங்கி 4 வருடங்கள் ஆகிய நிலையில் சமீபத்தில் தான் மொத படப்பிடிப்பும் முடிந்தது. பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போனது. தற்போது, படத்தின் தயாரிப்பாளர் மதன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ENPT ட்ரெய்லர் ரெடியாகி விட்டது. மேலும், படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். நமக்கு கிடைத்த தகவல்படி ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்களாம். பொறுத்திருந்து பாப்போம் இந்த முறையாவது சொன்ன மாதிரி வருவார்களா என்று.! Suggestions For You தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்… குப்பைக்கு போன…

Read More

எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு வந்த சோதனை – இதற்கு முடிவே இல்லையா?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடந்த நிலையில் தற்போது அதை தூசி தட்டப்படுகிறது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் முழு படப்பிடிப்பும் முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்கிடைத்தது. இதனால் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தகவல் வந்துளளது. மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டு படம் மேலும் முடங்கி விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. Suggestions For You தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்… குப்பைக்கு போன என்னை நோக்கி பாயும்…

Read More

ஒரு வழியாக ரிலீஸ் தேதியை உறுதி செய்த என்னை நோக்கி பாயும் தோட்டா – இதுவா?

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 2016 ஆம் ஆண்டு இப்படத்திற்கு பூஜா போடப்பட்டு தொடங்கியது, அதே வருடம் டிசம்பர் மாதம் இதன் டீசர் வெளியானது. ஆனால் சென்ற வருடம் தான் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டது பற்றிய அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் ரிலீஸ் தேதியினை அறிவிக்காமலேயே இருந்தனர். எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு சந்தோஷமான தகவல் வந்துள்ளது. அதவாது, என்னை நோக்கி பாயும் தோட்டா மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது என தகவல் கிடைத்துள்ளது. Suggestions For You தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்… குப்பைக்கு போன என்னை நோக்கி…

Read More