காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?

Suriya

கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இதில் மோகன் லால், ஆர்யா மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கே வி ஆனந்த் உடன் பழம்பெரும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் இணைந்து இந்த கதையை உருவாக்கியிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி செம வரவேற்பை பெற்றுள்ளது. மோகன் லால் இதில் பிரதமராக நடித்துள்ளார், அவரது பாதுகாப்பு அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துளளது. இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. Suggestions For You தமிழ்…

Read More

தமிழ் புத்தாண்டில் காப்பான் ஸ்பெஷல் – இயக்குனர் தகவல்!

suriya

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் “NGK”. அதை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாகவும் மோகன்லால் பிரதமராகவும் நடித்துள்ளார்கள். தற்போது இப்படம் இயக்கும் கே.வி. ஆனந்த் ஒரு சூப்பர் தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது வரும் தமிழ் புத்தாண்டில் படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் வரவுள்ளதாம். இதனை இயக்குனரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அநேகமாக காப்பான் படத்தின் டீஸர் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களால் கணிக்கப்படுகிறது. What’s coming out of #Kaappaan for the Tamil New Year?…Guess what? @LycaProductions @Suriya_offl @Mohanlal @Jharrisjayaraj @arya_offl @sayyeshaa @bomanirani @msprabhuDop @editoranthony @KiranDrk @dhilipaction — anand k v (@anavenkat) April 11, 2019 Suggestions…

Read More

மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்பான் ரகசியம் வெளியானது!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பான். முழுக்க முழுக்கு வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் மோகன்லால் நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் லைவ் மூலம் சூர்யா கலந்துகொண்டார். அப்போது காப்பான் படத்தின் கதை பற்றி கேட்கப்பட்டது. உஷாராக பதிலளித்த சூர்யா ஏற்கனனே கசிந்த தகவல்கள் மட்டும் கூறினார். அதாவது இப்படத்தில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் நான் அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளேன் என்றார். எந்த தகவலையும் கசிய விடமால் பார்த்துக்கொண்டது காப்பான் படக்குழு. ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகும் என மோகன்லால் உளறிவிட்டார், ஆனால் அதே சூர்யா ஆகஸ்ட் விடுமுறை நாளில் இப்படம் வெளியாகும் என உஷாராக பதிலளித்தார். Suggestions For You காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… தமிழ் புத்தாண்டில் காப்பான் ஸ்பெஷல்…

Read More

காப்பான் படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கே. வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சூர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் காப்பான் படத்தின் படப்பிடிப்பில் ஆர்யா பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. ஆர்யாவுடன் பணிபுரிவது மிகச் சிறந்த அனுபவம். என்றார். படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். பின்னர் இதற்கு பதிலளித்த ஆர்யா, நன்றி சார். உங்களுடன் பணிபுரிந்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களுடைய அடுத்த படத்துக்காக என்னுடைய நம்பரை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் . சூர்யா சார், உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றார். Suggestions For You…

Read More

விறுவிறுப்பான “காப்பான்” – சூர்யா படம் பற்றி வெளியான தகவல்!

suriya

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் காப்பான். மோகன் லால், ஆர்யா, சயிஷா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மும்மரமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது, இதில் மோகன் லால் இந்திய பிரதமராக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பணியாற்றி வரும் எடிட்டர் ஆண்டனி, காப்பான் படம் விறுவிறுப்பான, த்ரில்லர், பல திருப்பங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டுவர தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது. Suggestions For You காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… தமிழ் புத்தாண்டில் காப்பான் ஸ்பெஷல் – இயக்கு… மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்… காப்பான் படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… முக்கிய நாளில் சூர்யாவுடன் மோதும் பிரபல நடிகர் &#8……

Read More

முக்கிய நாளில் சூர்யாவுடன் மோதும் பிரபல நடிகர் – கடும் போட்டி!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “NGK”. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியிலாகவுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. அதே வேளையில் சூர்யா கே.வி.ஆனந்துடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் படமாக உருவாகிவரும் இதில் சூர்யா போலீஸாக நடித்துவருகிறார். மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மோகன் லாலும் இதில் நடித்துள்ளார். இந்நிலையில் காப்பான் படம் வரும் ஆக்ஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படமும் வெளியாகவுள்ளதாம். சூர்யாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உண்டு. அதே வேளையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸின் படம் வருவதால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் பாகுபலி பிறகு வெளியாகும் பிரபாஸ் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும்…

Read More

சூர்யாவின் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா? – அப்போ செம ட்ரீட் தான்!

“மாற்றான்” படத்திற்கு பிறகு சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படம் “காப்பான்”. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் கதைக்களமும் இந்தியாவிற்கு வரும் ஆபத்தை காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளதால் அந்த தேதி சரியாக இருக்கும் என படக்குழு எண்ணுகிறது. Suggestions For You காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… தமிழ் புத்தாண்டில் காப்பான் ஸ்பெஷல் – இயக்கு… மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்… காப்பான் படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… தல…

Read More

காப்பான் படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா தரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். எதிர்பாத்த அளவிற்கு இந்த படம் வெற்றிபெறுவில்லை என்றாலும் லாபத்தை தந்தது, அதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சூர்யா, வரும் 14ஆம் தேதி இதன் டீசர் வெளியாகவுள்ளது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் “காப்பான்” படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஆர்யா, மோகன்லால் போன்ற நட்சத்திரங்கள் நடித்துவரும் இப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிவருவது. என்.ஜி.கே டீசரை தொடர்ந்து “காப்பான்” டீசர் மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் பரவியது. ஆனால் அது பொய்யாம். என்.ஜி.கே படம் ரிலீஸ் ஆகும்வரை “காப்பான்” மற்றும் சூர்யா நடிக்கும் எந்த படத்தின்…

Read More

சூர்யாவுக்கு வில்லனாக மாறிய பிரபல காமெடி நடிகர் – இப்படியொரு கதாபாத்திரமா?

suriya

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் “காப்பான்”. மிக பெரிய பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் தொடரவுள்ளது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்டோர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகரான மயில்சாமி இணைந்துள்ளார். ஆனால் இவருக்கு இப்படத்தில் நெகடிவ் கதாபாத்திரம், வில்லன்களில் ஒருவராக வரவுள்ளதாக கூறப்படுகிறது. நகைச்சுவையில் மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் இவர் பாராட்டுகளை வாங்கியவர் என்று குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… தமிழ் புத்தாண்டில் காப்பான் ஸ்பெஷல் – இயக்கு… மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்… காப்பான் படக்குழு…

Read More