தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த முன்னணி மலையாள நடிகை!

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வட சென்னை. இரண்டு பாகங்களாக உருவாகிய இப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து வட சென்னை இரண்டாம் பாகத்தை வெப் சீரிஸாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே தனுஷை வைத்து மற்றொரு படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அசுரன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த மாதம் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்ட நிலையில் இம்மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். தற்போது இப்படத்தின் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.…

Read More