இதுக்கு தான் 90ml படத்தில் நடித்தேன் – சிம்பு விளக்கம்!

ஓவியா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 90 ml. ஆபாச வார்த்தைகள், பெண்கள் மது அருந்துவது, சீக்ரெட் அடிப்பது என சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்படத்திற்கு சிம்பு தான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனம் தான் கிடைத்தது. இப்படத்தில் நடித்ததால் ஓவியாவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. இந்நிலையில் 90ml படத்திற்கு இசையமைத்ததோடு கிளைமாக்ஸில் ஓவியவுடன் லிப்-லாக் காட்சியில் நடித்திருந்த சிம்பு இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். “ஆண்களை இழிவுபடுத்தாமல் பெண் சுதந்திரத்தைப் பற்றி இக்கதையை எழுதியுள்ளார் அனிதா உதீப். அதற்காகவே இப்படத்தை ஒப்புக் கொண்டேன்,” என அவர் கூறியுள்ளார். Suggestions For You வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு… சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?… மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்……

Read More

90 ML படம் கலாசார சீரழிவு என்று கூறியவர்களுக்கு ஓவியாவின் மொக்க பதில் !

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய ரசிகர்களை சம்பாதித்தார். இந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு 90 ML என்ற அடல்ட் படத்தில் நடித்தார். சென்ற வெள்ளிக்கிழமை படம் வெளியான நிலையில் ஓவியா பற்றிய மோசமான விமர்சனங்கள் உச்சத்தை தொட்டுள்ளது. அவரது ரசிகர்களே அவரை திட்ட ஆரம்பித்தனர். இது பற்றி ஒரு வார இதழுக்கு ஓவியா பேட்டி அளித்துள்ளார்.. “என் படத்தை யாருமே பார்க்கலைனாகூட பரவாயில்லை. எனக்கு நடிப்பு பிடிச்சிருக்கு, நான் நடிக்கிறேன். அதை பார்க்கப் பிடிக்கலைனா பார்க்காதீங்க… சிம்பிள். மத்தவங்களுக்காக வாழ்றதைவிட நமக்காக வாழ்ந்தாலே போதும். லைஃப் நல்லாயிருக்கும்!” என ஓவியா கூறியுள்ளார். ஆனால் இந்த பதிலையும் கிண்டல் செய்து வருகிறார்கள். பொதுமக்களுக்காக தான் சினிமா எடுக்கிறார்கள் அதை விமர்சிப்பது பொதுமக்களின் உரிமை. Suggestions For You தமிழ் சினிமா பார்க்காத ஹாட்டான சீன் –…

Read More

மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் 90 ml படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? விவரம் இதோ!

ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் 90 ML . “A” சான்றிதழ் பெற்ற இப்படம் சர்ச்சையுடன் நேற்று வெளியாகியுள்ளது. சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மது அருந்துவது, கஞ்சா அடிப்பது , ஆபாசமாக பேசுவது என இப்படத்தில் எல்லை மீறி நடித்துள்ளார்கள் ஓவியா மற்றும் நடிகைகள். பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் தீட்டிவருகிறார்கள். வெளியான அனைத்து இடங்களிலும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்கிடையே இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. சென்னையின் மட்டும் முதல் நாளில் 30 லட்சம் வசூல் செய்துள்ளது. 90ml படத்திற்கு காலை 5 மணி காட்சி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. Suggestions For You 90 ML படம் கலாசார சீரழிவு என்று கூறியவர்களுக்கு ஓவ… தமிழ் சினிமா பார்க்காத ஹாட்டான சீன் –…

Read More

90 ML திரை விமர்சனம்

ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் 90 ML . “A” சான்றிதழ் பெற்ற இப்படம் சர்ச்சையுடன் இன்று வெளியாகியுள்ளது. சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதை: ஓவியா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் தனது காதலருடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு வருகிறார். சீக்ரெட் பிடிப்பது தண்ணி அடிப்பது என சுற்றிவரும் ஓவியாவை பார்த்து பக்கத்தில் இருக்கும் அபார்ட்மெண்ட் பெண்களுக்கு அதிர்ச்சி ஆகிறார்கள். அந்த பெண்கள் குடும்பம், கணவர் என வாழ்க்கையை ஓடிக்கொண்டிருக்கின்றனர். நான்கு பெண்கள் ஓவியாவுடன் நெருக்கமாக பழகுகின்றனர். அந்த பெண்களுள் ஒருவருக்கு பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறார் ஓவியா. அப்போது குடிக்கும் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் பற்றி பேசுகின்றனர். ஓவியாவின் தோழிகளுக்கு இருக்கும் குடும்ப தைரியமாக ஓவியா தீர்த்து வைக்கிறார் என்பது தான் மீதிகதை. விமர்சனம்: குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு…

Read More

தமிழ் சினிமா பார்க்காத ஹாட்டான சீன் – 90 ML புதிய வீடியோ (உள்ளே)

நடிகை ஓவியா 90 Ml படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து. இந்த ட்ரைலர் ட்ரைலரில் ஓவியா, புகைபிடிப்பது தண்ணி அடிப்பது, லிப் லாக் என்று நடித்துள்ளதால் ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் தற்போத புதிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதோ.. Suggestions For You 90 ML படம் கலாசார சீரழிவு என்று கூறியவர்களுக்கு ஓவ… இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் தான் – ஓவிய… மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் 90 ml படத்தின் ம… 1000 பேர் முன்னாடி கூட இதை செய்வேன்.. எனக்கு வெட்க… ஓவியாவின் 90 ML அடல்ட் படத்தின் கதை இது தான் &#821… இதுக்கு தான் 90ml படத்தில் நடித்தேன் – சிம்ப… 90ml, தடம் முதல்…

Read More

இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் தான் – ஓவியா அதிரடி பேட்டி!

அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90 எம்.எல் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அடல்ட் படமாக உருவாகியுள்ள இப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் 1 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய ட்ரெய்லரில் இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, “நான் எங்கு ஆபாசமாக நடித்துள்ளேன். பெண்கள் என்றால் அழுது கொண்டே வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா?. நான் ஒன்றும் நிர்வாணமாக நடிக்கவில்லையே. பலாத்கார காட்சியிலும் நடிக்கவில்லை” என்றுள்ளார். மேலும் இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம் தான் என்றும் கூறியுள்ளார். Suggestions For You 90 ML படம் கலாசார சீரழிவு என்று…

Read More

1000 பேர் முன்னாடி கூட இதை செய்வேன்.. எனக்கு வெட்கம் இல்லை – ஓவியா அதிரடி!

பிக் பாஸ் மூலம் தனக்கு ரசிகர்களை உருவாக்கி நடிகை ஓவியா தற்போது நடித்துள்ள படம் 90 ML. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை கண்டது. மிகவும் ஆபாசமாக பேச்சுகள் செயல்கள் என அந்த ட்ரைலர் பலரை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் தற்போது இதுபற்றி ஓவியா அளித்துள்ள பேட்டியில் முத்தக்காட்சி மற்றும் ஆபாசமான காட்சிகளில் நடித்தது பற்றி பேசியுள்ளார். “இதில் என்ன வெட்கம். இதுதான் profession. 100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன்” என கூறியுள்ளார். மேலும் இப்படி நடித்தது பற்றி யாரெனும் தவறாக நினைத்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை என ஓவியா மேலும் கூறியுள்ளார். Suggestions For You 90 ML படம் கலாசார சீரழிவு என்று கூறியவர்களுக்கு ஓவ… மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும்…

Read More

ஓவியாவின் 90 ML அடல்ட் படத்தின் கதை இது தான் – வெளியான தகவல்!

‘களவாணி’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர் ஓவியா. அதையடுத்து பல படங்களில் நடித்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். இந்நிலையில், சிம்பு இசையமைப்பில், அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள 90ML படத்தில் ஓவியா நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அடல்ட் படமான இதில் அபாச வசனங்கள் பேசும் ஓவியா மற்றும் துணை நடிகர்கள், ஆபாச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதுபோன்ற படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது. “பெண்கள் ஒரு கட்டமைப்புக்குள் வாழாமல் அதை உடைத்து சொந்தமாக முடிவு எடுப்பதை படம் பேசும் அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஓவியாவும் அவரது தோழிகளும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே கதை” என்று தெரிவித்துள்ளார். Suggestions For You 90 ML படம்…

Read More