என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா? மாஸ் ஏற்பாடு!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்க தான் ரசிகர்கள் வெயிட்டிங். இந்தியாவிலேயே அதிக அடியுள்ள கட்-அவுட்டை உருவாக்கும் பணியில் சூர்யா ரசிகர்கள் இறங்கியுள்ளார்கள். அதற்கான ஆரம்பக்கட்ட பெயின்டிங் பணிகள் நடந்து வருகிறது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Suggestions For You என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர… அதிகம் வசூல் செய்த டாப்…

Read More

அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா படங்கள் – லிஸ்ட் இதோ!

பாஸ் ஆபிஸ் வரிசையில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது சூர்யா தான். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இயக்கும். அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் ‘என் ஜி கே’ படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் கண்டிப்பாக சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வசூலை கொடுக்கும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். என் ஜி கே படத்திற்கு கிடைத்த சான்றிதழ் – ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்நிலையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த சூர்யாவின் டாப்-5 படங்கள் எது என்பதை பார்ப்போம்.. அஞ்சான் பட சாதனையை என் ஜி கே முறியடிக்கும் – முதல் நாள் வசூல் கணிப்பு இதோ! சிங்கம்2- ரூ 60 கோடி 7ம் அறிவு- ரூ 55 கோடி சிங்கம்- ரூ 46 கோடி அஞ்சான் ரூ 43 கோடி தானா…

Read More

அஞ்சான் பட சாதனையை என் ஜி கே முறியடிக்கும் – முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரம்மாண்டமாக வெளியிடுவதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் என் ஜி கே படம் கண்டிப்பாக தமிழகத்தில் முதல் நாள் ரூ 10 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகின்றது. சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இந்த வசூலை வேறு எந்த சமீபத்திய சூர்யா படமும் முறியடிக்கவில்லை. இதனை தற்போது என் ஜி கே முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்… அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா…

Read More

மீண்டும் இணையும் சூர்யா, ஜோதிகா ஜோடி?

சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்திம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு ப்ரமோஷன் வேளைகளில் இறங்கியுள்ள சூர்யா, தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்களும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூர்யா, அப்படியொரு எண்ணம் எங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. பொருத்தமான, சிறப்பான கதை கேட்டு வருகிறோம்; விரைவில் படம் துவங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியிருக்கிறார். அதேபோல, நீங்கள் நடித்த படங்களிலேயே உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த படம் எது என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூர்யா, சிங்கம் 2, தானா சேர்ந்த கூட்டம் ஆகியவை தான் என கூறியுள்ளார்…

Read More

என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்!

suriya

இயக்குநர் செல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய, இதில் தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு என்று பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பி இருக்கும் இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் ட்விட்டரில் NGK, #NGKFire, #NGKFromMay31 என்ற ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜிக்கள் வெளியாகியுள்ளது. சூர்யா புகைப்படத்துடன் கூடிய எமோஜியை கண்டு ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள். Suggestions For You என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்… அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா…

Read More

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் சூர்யா, கார்த்தி? – செல்வரகவான் மாஸ்டர் பிளான்!

தமிழ் சினிமா மிகவும் கவனிக்க கூடிய ஒரு இயக்குனர் செல்வராகவன். இவர் படங்கள் முதலில் வரவேற்பு பெறவில்லை, ஆனால் ரசிகர்கள் அவரின் அருமையை காலங்கள் கடந்து தான் தெரிந்து கொண்டார்கள். அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனபோது எப்படிபட்ட வரவேற்பு பெற்றது என்பதை பார்த்தோம். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து செல்வராகவன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதல் பாகம் சரியாக வரவேற்பு பெறவில்லை என்ற போது வருத்தப்பட்டேன், ஆனால் மீண்டும் மக்கள் கொடுத்த ஆதரவு பார்த்து சந்தோஷமாக இருந்தது. இரண்டாம் பாகம் இயக்க பெரிய ஆவலாக உள்ளது, நான் முயற்சி செய்வேன் ஆனால் நடக்க வேண்டும். கார்த்தி மற்றும் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் ஆனால் அதை அவர்களிடம் கேட்க வேண்டும். இது பெரிய படம், அப்படி மட்டும் நடந்தால் நன்றாக…

Read More

கிராமத்து வாசனையில் சூர்யாவின் அடுத்த படம் – முன்னணி இயக்குனர் உறுதி!

suriya

சூர்யா நடித்துள்ள NGK படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இடத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இவர் நடித்துள்ள காப்பான் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது, மேலும் சுதா, சிவா என பல இயக்குனர்கள் படங்களில் நடிக்கவிருக்கின்றார். அப்படியிருக்க தற்போது பாண்டிராஜும் சூர்யாவிற்காக ஒரு கதையை தயார் செய்து வருகின்றார்.+ அப்படம் குறித்து டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார், அதை நீங்களே பாருங்கள்… Sir @Suriya_offl Anna vachi oru movie edunga 🙏🙏🙏 — SRIKANTH MURUGESAN (@SINKARA73) May 1, 2019 Suggestions For You என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்… அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா படங்கள் – ல… அஞ்சான் பட சாதனையை…

Read More

தேசிய அளவில் பெருமைப்படுத்திய சூர்யா மகன் தேவ் – வாழ்த்துக்கள்!

dev-suriya

சூர்யா, ஜோதிகா ஜோடி என்றால் அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடிக்கும். காதல் ஜோடியான இவர்களுக்கு திருமணமாகி தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். ஆனால் இன்னும் இந்த குட்டி பிரபலங்கள் சினிமா பக்கம் வரவில்லை. படிப்பு, விளையாட்டு என இருக்கிறார்கள். தியா சில நாட்களுக்கு முன் மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பை பெற்றார். தற்போது தேவ் தேசிய அளவில் ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். 40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் தேவ் வெற்றியடைந்துள்ளார். இதை காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தார்களாம். தேசிய அளவிலான கராத்தே போட்டி: சூர்யா மகன் தேவ் வெற்றி[email protected]_offl @johnsoncinepro pic.twitter.com/dD9bzKJH1b — Kayal Devaraj (@devarajdevaraj) April 28, 2019 Suggestions…

Read More

என்.ஜி.கே படத்தின் ட்ரைலர், இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்.ஜி.கே.’ சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது. தற்போது வரை 10 மில்லியன் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. தொடர்ந்து தள்ளிப்போய்வந்த இந்த படம் மே31ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தற்போது ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ஏப்ரல் 29ம்…

Read More

சிவா இயக்கும் சூர்யா படத்தின் நாயகி இவர் தானா?

suriya-siva

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிவா சூர்யாவை வைத்து படம்இயக்கவுள்ளார். இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் 39வது படமான இதில் நயன்தாராவை நாயகியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சிவா தான் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளாராம். சிவா இயக்கிய விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது மும்பையில் நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கஜினி படத்திற்கு பிறகு அவர் 14 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். Suggestions For You என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்… அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா படங்கள் – ல… அஞ்சான் பட சாதனையை என் ஜி…

Read More