அஜித்தின் பிறந்தநாளன்று வெளியாகும் ஸ்பெஷல் அறிவிப்பு – ரசிகர்கள் ரெடியா?

ajith

அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எல்லா வருடமும் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் அஜித்தின் பிறந்தநாள் இந்த வருடமும் அதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை மே 1 ஆம் தேதி வெளியாக என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ஆகஸ்ட் 10ஆம் தள்ளிப்போனது. இந்நிலையில் மே 1ம் தேதி அஜித்தின் அடுத்த படம் தல60 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பிறந்தநாள் விருந்தாக இந்த அறிவிப்பு வருகிறது. வினோத், வெங்கட்பிரபு, விஷ்ணு வர்தன், சிவா என பல இயக்குனர்களின் பெயர்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அஜித் யாருடன் கூட்டணி சேர்கிறார் என்பது மே 1ம் தேதி தெரிந்துவிடும். Suggestions For You அஜித்தின் அடுத்த படத்தின் கதைக்களம் இது தானா? &#82… அஜித் 60வது படம் குறித்து…

Read More

அஜித்தின் அடுத்த படத்தின் கதைக்களம் இது தானா? – அப்போ சர்ச்சை தான்!

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தீரன் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை மே அல்லது ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. அதன்பிறகு அஜித்தின் 60வது படத்தை மீண்டும் எச்.வினோத்தான் இயக்கவுள்ளாராம். இந்த படம் அரசியல் பற்றியதாக இருக்கும் என கூறப்படுகிறது. அஜித்தை அரசியல்வாதியாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். விஜய் அரசியல் கதையில் நடித்து எவ்வ்ளவு பிரச்சனைகள் சர்ச்சைகளை சந்தித்தார் என்பது நமக்கு தெரியும். இப்பொது அஜித்தும் அந்த களத்தில் குதிப்பது பரபரப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. இந்த படத்தையும் போனி கபூர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். Suggestions For You அஜித்தின் பிறந்தநாளன்று வெளியாகும் ஸ்பெஷல் அறிவிப்… அஜித் 60வது படம் குறித்து ஆங்கில பத்திரிகையில் வெள……

Read More

அஜித் 60வது படம் குறித்து ஆங்கில பத்திரிகையில் வெளியான தகவல் -இயக்குனர் இவர் தான்!

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்த படத்தை முடித்தவுடன்மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் அப்படம் கைவிடப்பட்டது எண்டு செய்திகள் உலா வந்ததது. அதை பொய்யாக்கும் வகையில் தற்போது செய்து வந்துள்ளது. ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தல 60வது படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் தான் இயக்குகிறார் என்று கூறுகின்றனர். அதோடு அப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை என்று அவர்களது செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். Suggestions For You அஜித்தின் பிறந்தநாளன்று வெளியாகும் ஸ்பெஷல் அறிவிப்… அஜித்தின் அடுத்த படத்தின் கதைக்களம் இது தானா? &#82… அஜித்தின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்துவிட்டார்களா? … 200 கோடி வசூலை தாண்டிய…

Read More