சமூக பிரச்னையை பேசும் தல அஜித் – அடுத்த படத்தின் சுவாரசிய தகவல்!

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் படம் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.

அஜித் நடிப்பில் அடுத்ததாக ‘நேர்கொண்ட பார்வை’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.

இப்படத்தை தொடந்து அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்கவுள்ளார். பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த வருடம் கோடையில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்காக வினோத் அஜித்திடம் இரண்டு கதைகள் கூறியுள்ளார். அரசியல் கதை ஒன்று மற்றோன்று சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்னையை பேசும் கதை என இரண்டு கதையை கூறியுள்ளார்.

அரசியல் கதையை தவிர்த்த அஜித் சமூக பிரச்சனை பேசும் கதையை தேர்வுசெய்துள்ளார். இந்த கதை தற்போது சமூகத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் படமாக இருக்கும் என தகவல் வந்துள்ளது.

Suggestions For You

Loading...