தளபதி 63 ஆடியோ உரிமை மட்டும் இத்தனை கோடியா? – புதிய சாதனை!

atlee

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, இந்துஜா, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார்.

அண்மையில் படத்தின் பாடல்கள் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் டுவிட் செய்திருந்தார். இந்த நேரத்தில் படத்தின் ஆடியோ குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. மெர்சல் படத்தின் பாடல்கள் ரூ. 2.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.

அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் பாடல்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இப்பட பாடல்கள் உரிமம் மட்டும் மெர்சலை விட 2 மடங்கு அதிகமாக அதாவது ரூ. 5 கோடிக்கு விற்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளார்களாம்.

பிரம்மாண்ட படத்தின் ஆடியோவை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Suggestions For You

Loading...