தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக அறிவித்த பிரபலம்!

vijay 63

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இந்தப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா படங்கள் – லிஸ்ட் இதோ!

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக் ஃபஸ்ட் லுக் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி இன்னும் 30 நாட்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்.

https://twitter.com/Lyricist_Vivek/status/1131215400195112960/photo/1

Suggestions For You

Loading...