தெறி, மெர்சல் கதையிலே உருவாகும் தளபதி 63 – அட என்னய்யா இது?

atlee-vijay2

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மீண்டும் அட்லீ – விஜய் கூட்டணி இணைந்துள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் 63வது படத்தை அட்லீ இயக்கிவருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

இந்த சமயத்தில் இப்படத்தின் கதை இது தான் என்று ஒரு தகவல் வேகமாக பரவிவருகிறது. என்ன கதை என்றால், விஜய்-கதிர் இருவரும் நண்பர்கள். கால்பந்து வீரர்களான இருவரும் பின்னாளில் கால்பந்து பயிற்சியாளராக மாறுகிறார்களாம்.

அப்போது கதிர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவருடைய மரணத்தின் காரணத்தை விஜய் கண்டுபிடிக்கிறார்.

வில்லன்களை பழிவாங்குவதோடு கதிர் பயிற்சி கொடுத்த கால்பந்து அணியை எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது.

தெறி, மெர்சல் படங்களை போல பழிவாங்கும் கதைக்களத்தில் தான் இந்த படமும் உருவாகிறது என்பது தெரிகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment