தளபதி 63: மீண்டும் சன் நிறுவனத்துடன் இணைந்த விஜய்!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் கால் பந்து பயிற்சியாளர்க நடிக்கிறார்.

விஜய்யின் 63வது படமான இதற்கு இன்னும் பெயரிடவில்லை. விறுவிறுப்பாக நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்துவருகிறது.

அண்மையில் கூட வட சென்னை பக்கத்தில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது, அந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் நயன்தாரா கலந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படி படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடக்க படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட். அதாவது தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.

இதற்கு முன்பு விஜய் நடித்த சர்கார் படத்தை சன் நிறுவனம் தான் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...

Leave a Comment