சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?

vijay

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தயாரிப்பு நிறுவனமும் படத்தின் வியாபாரத்தில் படு பிஸியாக உள்ளனர்.

விஜய்யின் மெர்சல் ரூ. 65 கோடிக்கும், சர்கார் ரூ. 80 கோடிக்கு மேலும் தமிழ்நாட்டில் விலைபோனது. இப்போது தளபதி 63 படத்தை இதற்கும் அதிகமாக வாங்க பலர் முன்வருகிறார்களாம். ஆரம்பமே ரூ. 70 கோடிக்கு மேல் தான் விஜய் படங்கள் பேசப்படுவதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

Suggestions For You

Loading...