உறுதியானது தளபதி 64 கூட்டணி – புகைப்படத்துடன் வெளியான தகவல்!

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 என அழைப்படும் பெயரிடப்படாதா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தளபதி 64 படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் கிட்டத்தட்ட இந்த படம் அதிகாரபூர்வமாகி விட்டது.

மேலும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுடன் விஜய் எடுத்து கொண்ட புகைப்படம் தற்சமயம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அனிருத்தும் உடை இருப்பதால் இப்படத்திற்கு இசையமைப்பாளர் இவர் தான் என உறுதியாகியுள்ளது.

Suggestions For You

Loading...