“துள்ளாத மனமும் துள்ளும்” படத்திற்கு முதலில் இந்த தலைப்பு தான் வைக்கப்பட்டதாம்!

“துள்ளாத மனமும் துள்ளும்” சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படம். விஜய்யின் எளிமையான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருப்பார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சிம்ரன் நடிப்பிற்காக மிகவும் பேசப்பட்டார்.

கேரளாவில் இந்த படம் விஜய்க்கு ஒரு மார்க்கெட் கிடைக்க உதவியது என்றே கூறலாம். படம் ரிலீஸ் ஆகி 20 வருடங்கள் ஆன நிலையில் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் இயக்குனர் எழில்.

முதலில் படத்திற்கு ருக்மணிக்காக என்று தான் எழில் பெயர் வைத்தாராம். பின் அப்பெயர் பார்த்தால் பசி தீரும் என்பது போல் வேண்டும் என தயாரிப்பாளர் கேட்ட துள்ளாத மனமும் துள்ளும் என பெயர் வைத்தார்கள்.

அதோடு இதில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது ரம்பா தானாம், கதையில் மாற்றம் வர அவருக்கு பதில் சிம்ரன் கமிட்டானாராம்.

Suggestions For You

Loading...