காப்பான் படத்திற்கு பிறகு உறியடி இயக்குனருடன் இணைந்த சூர்யா!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக NGK படம் வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கிவரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது அவருடைய 38-வது படமாகும். ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ஜீ.வி.பிரகாஷ்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘உறியடி’ படத்தின் இயக்குநர் விஜய் குமார் வசனம் எழுதியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

விஜய் குமார் இயக்கி, நடித்து வெளியான ‘உறியடி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...

Leave a Comment