#Pray_for_Neasamani மீம்ஸ் எல்லாம் அனுப்புங்க – வடிவேலு கேட்குறாரு !

vadivelu

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் அதிகம் ஈர்த்தவர் காமெடி நடிகர் வடிவேலு. அவர் காமெடியனாக நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் அவரது காமெடி இப்போதும் தொலைக்காட்சிகளில் அதிகம் பார்க்கலாம்.

அதிலும் குறிப்பாக பிரென்ட்ஸ் படத்தில் கான்ட்ராக்ட்டர் நேசமணி கதாபாத்திரத்தில் வடிவேலுவின் காமெடியை இப்போது பார்த்தாலும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.

நேற்றில் இருந்து #Pray_for_Neasamani என்ற ஹாஸ் டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. நேசமணி தலையில் சுத்தி விழுந்த காமெடி தான் தற்போது திடீரெனெ ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் நேசமணி போன்ற கேரக்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் தனக்கு அளித்த பரிசு என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தற்போது பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வடிவேலு இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த மீம்ஸ் எல்லாம் வாட்ஸ் அப்பில் எனக்கு அனுப்புமாறு வடிவேலு கேட்டுக்கொண்டுள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...