இன்று: என்னை அழிக்க முடிவு செய்துவிட்டார்கள் – வடிவேலு பரபரப்பு பேட்டி!

வடிவேலு நடிக்கிறாரோ இல்லையோ எப்போதும் அவர் மக்கள் மனதில் இருப்பார். அதிலும் மீம் கிரியேட் செய்பவர்களுக்கு அவர் தான் குலசாமியே.

அந்த அளவிற்கு அவரை பயன்படுத்தாத மீமே இருக்க முடியாது, இந்நிலையில் வடிவேலு நடித்த ப்ரண்ட்ஸ் பட காமெடி நேற்றிலிருந்து எப்படி ட்ரெண்ட் ஆகிவருகின்றது என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தற்போது அவர் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் ‘தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, இந்த இடைவேளி எனக்கு நிறைய நன்மைகளை தான் தந்தது, என் பிள்ளைகளின் திருமணத்தை முடித்துவிட்டு, செட்டில் ஆகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...