பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்டிய விஜய்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டுக்கு ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருந்து வருகின்றனர், 

இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நம்மை கவர்ந்த பூவையார் நடித்துள்ளார். பூவையார் அளித்த பேட்டியொன்றில், தளபதி விஜய் எந்த பந்தாவும் இன்றி அருகில் அமர்ந்து பேசினார் மற்றும் நன்றாக நடிக்கிறாய் என்றும் கூறினாராம்.

மேலும் அவரிடம் ஜில்லா பட பாணியில் பேச கேட்டாராம், அவரும் உடனே அப்படியே பேசிக்காட்டினார், என்று பூவையார் கூறினார்.

Suggestions For You

Loading...