படப்பிடிப்பிற்கு விலையுயர்ந்த காரின் வந்த விஜய் – எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் தளபதி விஜய்.  இந்தியா முழுவதும் மிகப்பெரிய மார்க்கெட்டை வைத்திருப்பவர் விஜய்.

இவர் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.  கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

சென்னையில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை காண விஜய்யின் ரசிகர்கள் கூட்டம் தினமும் அலைமோதுகிறது.  அவ்வப்போது விஜய்யும் தன்னைக் காண வந்த ரசிகர்களை சந்திப்பார்.

இன்று விஜய் விலையுயர்ந்த காரில் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். தன்னை பார்ப்பதற்காக காத்திருந்த அனைவரையும் பார்க்க காரில் இருந்து இறங்கி கையசைத்து விட்டு சென்றுள்ளார்.

அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் அந்த Rolls Royce காரின் விலை 7 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Suggestions For You

Loading...