மீண்டும் கார்த்தி சுப்பராஜுடன் இணையும் விஜய் சேதுபதி!

கார்த்தி சுப்பராஜ், விஜய் சேதுபதி இருவரும் நீண்ட கால நண்பர்கள். ஒன்றாக தான் சினிமா திரைக்கு வந்தார்கள்.

கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி பிட்சா, இறைவி போன்ற படங்கள் நடித்துள்ளார். கடைசியாக வந்த பேட்ட படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் இவர்கள் இணையவுள்ளார், ஆனால் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜ பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிநடிக்கவுள்ளார். கிராமத்து கமெர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment