சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி – மாஸ் தான்!

விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வரை இவர் கையில் அரை டசன் படங்கள் வைத்துள்ளார்.

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சிந்துபாத். இப்படத்தின் டீசர் இன்று 6மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தொடந்து நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதாம். அதுவும் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இணையவுள்ளார்கள்.

2016ஆம் ஆண்டு வெளியான சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நல்ல வெற்றியை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத் படங்களை தயாரித்த வன்சன் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாம்.

Suggestions For You

Loading...

Leave a Comment