விஜய் சேதுபதிக்கு கிடைத்த மாஸான டைட்டில் – புதிய படத்தின் தகவல்!

vijay-sethupathi

விஜய் சேதுபதி இப்போதே தனது 40வது படத்தை கையெழுத்தி போட்டுவிட்டார். 2020 முடியும் வரை அவரது கால் ஷீட் நிரம்பியுள்ளது.

அந்த வகையில் தற்போது வாலு, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.மாஸ் கமெர்ஷியல் படமான இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள்.

பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தைதயாரிக்க சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தநிலையில் படத்துக்கு சங்கத் தமிழன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...