தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி? உண்மை தகவல் இதோ!

dhanush vijay sethupathi

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் , மஞ்சுவாரியர் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள பகுதியில் நடந்து வருகின்றது.

கலைப்புலி S தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு G V பிரகாஷ் இசையில் 2 பாடல்கள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது . மீதமுள்ள பாடல்களுக்கான ரெகார்டிங் வேலைகள் நடந்து கொண்டுஇருக்கிறது .

சமூக வலைத்தளங்களில் தற்போது நடிகர் விஜய்சேதுபதி அசுரன் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகி வருகின்றது . இதை பற்றி மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மத் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் .

இந்த செய்தி வெறும் வதந்தியே , யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment