விஜய் சேதுபதியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – இவருக்கே இந்த நிலைமையா?

அவெஞ்சர்ஸ் படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இதற்கு முன்னர் வெளியான அவெஞ்சர் 3 பாகங்களும் வசூலில் சக்கைப்போடு போட்டதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார்.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் மார்வெல் சீரிஸ் படங்களில் வெளியான அயன்மேன் வாய்ஸ் தான் நல்லா இருக்கு. விஜய்சேதுபதி வாய்ஸ் இப்படத்திற்கு கேவலமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அயர்மேனுக்கு ஏற்கனவே வாய்ஸ் கொடுத்தவரை பேச வையுங்கள். விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டாகவில்லை. அழுகையே வருகிறது என்கிறார்கள் மார்வெல் ரசிகர்கள்.

Suggestions For You

Loading...

Leave a Comment