விஜய் சேதுபதியின் அடுத்தகட்ட அதிரடி – மிரட்டலான ரோல்!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகர் என்றால் விஜய் சேதுபதி தான். தனது ஒவ்வொரு படத்திற்கு வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகிவருகிறது.

சமீபத்தில் இவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் செம்ம வரவேற்பை பெற்றுவருகிறது.

ஹீரோவாக மட்டும் நடிக்காமல் சில படங்களில் நெகட்டிவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என ஏற்று நடித்து வருகிறார். தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி, நயன் தாரா, அமிதாப் பச்சனுடன் நடித்துள்ளார்.

தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். வைஷ்ணவ் தேஜ், மணிஷா ஜோடி நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாராம்

Suggestions For You

Loading...