தந்தையுடன் விஜய் – தளபதி 63 தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ!

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராநடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர்,விவேக், யோகிபாபு நடித்துவருகிறார்கள்.

கூடிய விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதியதாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய் இருக்கும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இது எப்போது எங்கு எடுக்கப்பட்ட வீடியோ என்ற தகவல்களை வெளியிடவில்லை.

Suggestions For You

Loading...

Leave a Comment