உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

முத்தையா முரளிதரன் இலங்கை தமிழன் ஆவார் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளார்.

தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் , இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்காக விஜய் சேதுபதி உடல் இடையை குறைப்பதாகவும், இப்படத்திற்கு 800 என பெயரிடப்பட உள்ளதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளது, இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...