வெற்றி படங்கள் கொடுத்த இளம் இயக்குனருடன் விக்ரம் – செம கூட்டணி !

விக்ரம் நடிப்பில் கடைசியாக “சாமி 2” படம் வெளியானது. பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதை தொடர்ந்து அடுத்ததாக “கடாரம் கொண்டான்”, “துருவ நட்சத்திரம்” படங்கள் வெளியாகவுள்ளது.

அதை தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படமான “மஹாவீர் கர்ணா” படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் “டிமான்டி காலனி”, “இமைக்கா நொடிகள்” போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேகமாக தயாராகி வருகிறதாம். ஏப்ரலில் இதுகுறித்த முறையான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment