தலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும் அஜித்-விஜய் பட இயக்குனர் – மிரட்டல் கூட்டணி!

பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படம் ரஜினிகாந்தின் 166-வது படமாகும். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார் எங்கிற தகவல் கசிந்துள்ளது. மெர்சல் படத்தில் வில்லனாக தெறிக்கவிட்ட எஸ்ஜே சூர்யாவை ரஜினி166ல் வில்லனாக நடிக்கவைக்க முருகதாஸ் அணுகியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment