தெலுங்கில் விஸ்வாசம் படத்திற்கு இப்படியரு நிலைமையை? பரவும் வதந்தி !

viswasam

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம். பொங்கலுக்கு வெளியான இப்படம் இன்றுவரை வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பினால் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை இப்படம் 2 கோடியை வசூல் செய்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால் உண்மையான நிலவரப்படி இப்படம் 1 கோடியை தான் ஈட்டியுள்ளதாம். மேலும் தெலுங்கில் B,C சென்டர்கள் அனைத்திலும் விஸ்வாசம் படத்தை நீக்கிவிட்டு அங்கு 2 மாதங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் F2 படத்தை திரையிட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மேலும் விஸ்வாசம் படம் ஜகமாலா என்ற பெயரில் வருகிற 7ஆம் தேதி கன்னடத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...

Leave a Comment